யாழ் பல்கழைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா (படங்கள் உள்ளே)
யாழ் பல்கழைக் கழக கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா ஆரம்பமானது. இப் பட்டமளிப்பு விழாவில் உள்வாரி மற்றம் வெளிவாரி பட்டதாரிகள் பட்டமளித்து கௌரவிக்கப்படஉள்ளனர்.
துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இன் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கழைககழக வேந்தர் கலந்து கொண்டார். இப் பட்டமளிப்பு நிகழ்வு 5 அமர்வுகளாக 5.00 மணி வரை இடம் பெறவுள்ளது. இதில் பட்டபின் இளமானி பட்டங்களை 1074 பேரும் பட்டபின் டிப்ளோமா வினை 71 பேரும் உள்வாரி பட்டங்களை 722 பேரும் டிப்ளோமாவை 5 பேரும் பெறுகின்ற அதே வேளை வெளிவாரி பட்டத்தினை 356 பேரும் பெற்றனர்.
இப் பட்டமளிப்பு விழாவில் கொளரவ இலக்கிய கலாநிதிப்பட்டம் 4 பேருக்கு வழங்கப்படவுள்ளன. தகைசார் பேராசிரியர் சி.க சிற்றம்பலம், தகைசார் பேராசிரியர் திருமதி ராயேஸ்வரி மகேஸ்வரன் ஆறுதிருமுருகன் மற்றும் வைத்திய கலாநிதி சே.ஆனந்த ராஜா ஆகியோருக்கும் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டங்கள் வழங்கி கௌரவிகப்படவுள்ளது குறிபிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment