Saturday, October 22, 2011

2400 பேர் வருடம்தோறும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.

வருடம்தோறும் 2400 பேர் முள்ளம்தண்டு பாதிக்கப்பட்டு இறப்பதாக வைத்திய கலாநிதி நரேந்திரா குறிப்பிட்டார். வீதி விபத்துக்குள்ளாகியே அதிகளவிலானோர் முள்ளந்தண்டு எலும்பு முறிவுக்கு உள்ளாவதாக அவர் குறிப்பிடுகிறார். இவர்களில் சிலர் முள்ளந்தண்டு பாதிக்கப்படுவதால் நிரங்தர அங்கவீனர்களாகின்றனர். சிலருக்கு சிறுநீர் கழிப்பதற்கான கட்டுப்பாடும் இழக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 1600 பேர் விபத்துக்களினால் முள்ளந்தண்டு முறிவுக்குள்ளாகின்றனர். ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதம்களில் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

முள்ளந்தண்டு முறிவு காரணமாக நிரந்தரமாக பாரிச வாத நோய்க்குள்ளாவதாகவும் மூளைக்கும் உடற்பகுதிகளுக்குமிடையிலான தொடர்பு இல்லாமல் போவதாகவும் குறிப்பிட்ட வைத்திய கலாநிதி இவ்விடயம் தொடர்பாக மக்களை விளிப்பூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment