பிரான்ஸ் ராணுவத்தினர் சென்ற ஹெலிகாப்டர் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் அதில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். ஆஃப்கானிஸ்தானில் கடந்த 10 வருடங்களாக அமெரிக்க தலைமையிலான நேடோ(NATO) என்ற பன்னாட்டு கூட்டு ராணுவம் தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் தாலிபான்கள் நடத்தும் தாக்குதலில் நேடோ(NATO) ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
நேற்று இரவு கபிஸா மாகாணத்தில் உள்ள "தகப்" என்ற மாவட்டத்தில் இருக்கும் பிரான்ஸ் ராணுவத்தினரின் விமான தளத்தின்மீது தாலிபான்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். சம்பவமறிந்து மற்றொரு இடத்திலிருந்து இந்த மாகாணம் நோக்கி ராணுவவீரர்களுடன் வந்த ஹெலிகாப்டர் பாதி வழியில் "ஜங்கலே பக்"(Jangle Bagh) என்ற இடத்தின் புறநகர்பகுதியில் தாலிபான்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணித்த 20 ராணுவவீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment