அரச ஓய்வூதியம் பெறும் 20,000 பேர் வெளிநாடுகளில் தஞ்சம்
இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறும் சுமார் 20,000 பேர்வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த இரண்டு வருடங்களாக அவதானித்த கணக்கெடுப்பின்படி 20,000பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரட்ன தெரிவித்தார்.
வெளிநாடு சென்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரு வருடங்களில் வெளிநாடுகளில் சென்று ஓய்வூதியம் பெறும் 3000 பேர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கைப் பணம் அநாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களை பெற்று புதிய முறையின் கீழ் அதனை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment