Thursday, October 20, 2011

நெதர்லாந்தில் புலிகளுக்கு 20 வருடம் சிறை வழங்கப்படலாம்.

ஐரோப்பாவில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் மீது நெதர்லாந்து நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியமை, குண்டுத் தாக்குதல், கொலை என்பவற்றுக்கு துணைபோனமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் ஐந்து சந்தேகநபர்களும் 20 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொலைகள் இடம்பெறுவதற்கு இந்த சந்தேகநபர்கள் தமிழ் இளைஞர்களை ஊக்குவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி நெதர்லாந்து நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சுமார் 6 வாரங்களாக விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. புலிகளின் பெயரில் சம்பளத்துக்கும், சோத்துக்குமாக தமிழர்களை கேவலமாக இணைத்தளம் நடத்தி நிதர்சனம் கண்ட ஊத்தை சேது நோர்வேயில் இருந்து ஹோலண்டிட்கு நாடு கடத்தப்பட இருக்கின்றான் என்று செய்திகள் கசிகின்றன. ஊத்தையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய முன்னாள் புலி.

    ReplyDelete