நெதர்லாந்தில் புலிகளுக்கு 2-6 வருட சிறைத்தண்டனை. நெடியவன் அரச தரப்பு சாட்சி.
தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுக்காக நெதர்லாந்தில் பணம் சேகரித்தமை, அவ்வியக்கத்திற்கு நிதி உதவி வழங்குமாறு மக்களை தூண்டியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து புலிகளுக்கு நெதர்லாந்து நீதிமன்று நேற்று 2-6 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நெதர்லாந்தில் டென்ஹாக் நகரத்திலுள்ள நீதிமன்றினால் குற்றவாளிகள் என கீழ்காணப்படுவோர் தண்டனைக் குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
செல்லையா 06 வருடங்கள்
இராமலிங்கம் 05 வருடங்கள்
இளவரசன் 03 வருடங்கள்
ஜேசுரட்ணம் 2 1/2 வருடங்கள்
தம்பியயையா 02 வருடங்கள்
மேற்படி நபர்களை கைது செய்த நெதர்லாந்து பொலிஸார் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது நோர்வேயில் தங்கியுள்ள நெடியன் தொடர்பான பல தகவல்களை கைது செய்யபட்டோர் தெரியப்படுத்தினர்.
அவர்களின் தகவலின் அடிப்படையில் நோர்வே விரைந்த நெதர்லாந்து பொலிஸார் நெடியவனை கைது செய்து விசாரணை செய்திருந்தது. நோர்வேயின் விசேட நீதிமன்று ஒன்றில் ஆஜர் செய்யப்பட்ட நெடியவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.
பின்னர் நெடியவன் அரசதரப்பு சாட்சியாக மாறியதாக தகவல்கள் கிடைக்கின்றது. மேற்படி குற்றவாளிகள் சார்பாக மன்றில் சமர்பிக்கப்பட்ட சாட்சியங்களில் நெடியவனின் சாட்சியமும் அடங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
புலிகளின் தலைமை காலம்காலமாக தம்மை தப்பிவித்துக்கொள்வதற்கு மேற்கொள்ளும் காட்டிக்கொடுப்புக்களுக்கு இதுவும் உதாரணமாகும்.
0 comments :
Post a Comment