சிறுவர் உதவி சேவை இலக்கமான 1929 இற்கு தினமும் குறைந்தது 10 முறைப்பாடுகள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் உதவி சேவை இலக்கமான 1929 இற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முறைப்பாடுகள் கிடைப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை சிறுவர்களால் முன்வைக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 01 ஆம் திகதி அன்று மட்டும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதை மற்றும் வன்முறைகள் தொடர்பாக 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இம் முறைப்பாடுகளில் 10 முறைப்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதையுடன் தொடர்புபட்டவை. ஏனைய முறைப்பாடுகள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் துஷ்பிரயோகங்களுடன் தொடர்பு பட்டவையாகும்.
இதேவேளை, சிறுவர் உரிமை மீறல்களும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்ளும் நாட்டில் தினம் தினம் அதிகரித்து வருவது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
சிறுவர்ளை பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment