17ம் திகதிக்கு முன் உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதானிகளை நியமிக்கவும் - தேர்தல்கள் செயலகம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் தமது சபைகளுக்கான பிரதானிகளை எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் நியமிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே தமது பிரதானிகளை நியமித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபைக்கு மேயரை நியமிக்க கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர். வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் அடிப்படையில் பிரதான பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment