Thursday, October 20, 2011

157 சிகரட் பொதிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

டுபாய் - சார்ஜாவிலிருந்து 157 சிகரட் பொதிகளைக் கடத்தி வந்த இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வந்த. விமானத்திலேயே இதனைக் கடத்தி வந்துள்ளதாகவும், இதன் பெறுமதி 6 இலட்சத்து 30 ஆயிரத்து 400 ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞன் மாணவ விசாவிலே டுபாய்க்கு சென்றிருந்ததாகவும் தெரிய வருகின்றது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்தபோதே கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்க அத்தியட்சகர் பராக்கிரம பஸ்நாயக்க கூறியுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment