கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர். இரண்டு மொழிகளில் தோற்றுகின்ற மாணவர்கள் தத்தமது தாய்மொழி மூலம் மூன்று பாடங்களுக்கு தோற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment