இலங்கை மின்சார சபைக்கு இரண்டு மாதங்களில் 12 பில்லியன் ரூபா நட்டம்
இலங்கையில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக மின்சார சபைக்கு 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பருவ மழை தாமதித்த காரணத்தினால் நீர் மின்சாரத்தை ஈடு செய்ய வெப்ப சக்தியை பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக இந்த நிலைமை தோன்றியுள்ளதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலேயே 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு தினசரி 120 முதல் 150 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு ஜூலை மாதத்தில் 20 சதவீதமாக இருந்து மார்ச், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறைவடைந்து சென்றது. எனினும் இந்நிலைமை செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. தற்போது நீர்த்தேங்கங்களில் நீர்மட்டம் 35 சதவீதமாக உயர்வடைந்து செல்கிறது.
0 comments :
Post a Comment