12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்கிறார் சம்பந்தன்
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடாதவாறு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினருக்குமிடையிலான 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பினருடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தைக்கான திகதியை தீர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 12 ஆவது சுற்று பேச்சவார்த்தை நேற்று திங்கட்கிழமை நடைபெறும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது எதிர்வரும் 8 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற இருப்பதாலும் ஆளும் கட்சியினர் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டிருப்பதாலும் இருதரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
0 comments :
Post a Comment