ஒருவரை மீட்க 1,000க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்களை விடுவிக்கிறது இஸ்ரேல்
இஸ்ரேலிய வீரர் கிலாத் ஷாலித் கடந்த ஐந் தாண்டுகளாக பாலஸ்தீனத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டு மென்றால் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விடுவிக்க வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இரு சாராரும் கையெழுத் திட்டுள்ளனர். இஸ்ரேலிய இளம் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் 2006ம் ஆண்டு ஜூன் மாதம் காசாவை இருப்பிடமாகக் கொண்ட தீவிர வாதிகளிடம் சிக்கினார். கடந்த ஐந்தாண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவர் ஒருவருக்காக அவரது நாடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒத்துக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் அரசு நேற்று அதிகாலையில் இந்த ஒப்பந்தத் திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தது. ஐந்தாண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி யிருந்த கிலாத் ஷாலித் இன்னும் சில நாட்களில் பத்திரமாக வீடு திரும்புவார் என்ற செய்தியை பிரதமர் நெட்டன்யாகு தம் நாட்டு மக்களுக்கு அறி வித்தார். இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நமது வீரர் கிலாத் நமக்கு மீண்டும் கிடைக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
ஹமாஸ் இயக்கத் தலைவர் கலீல் மெஷால் இந்தச் செய்தியை டமாஸ்கஸ் நகரில் தொலைக்காட்சி உரை ஒன்றில் உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தம் எகிப்தின் உதவியால் ஏற்பட்டதாகவும் இதனால் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட் டிருக்கும் 1,000 பாலஸ்தீனர் களை நாம் மீண்டும் பெறப் போகிறோம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment