10 ஆயிரம் இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளில்
சுமார் 10 ஆயிரம் இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளில் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள பல வைத்திசாலைகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், அவர்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைப்பதற்கான திட்டமொன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.
அமைச்சு இதுதொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரித்தானியாவில் 2500 க்கும் அதிகமான வைத்தியர்களும் அவுஸ்ரேலியாவில் 3500 வைத்தியர்களும் சேவையாற்றி வருகின்றனர். வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் 47 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையின் வைத்திய சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சின் இந்தத் தீர்மானமானது இன்றியமையாததாக அமையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுகின்றது. நாட்டிற்கு வருகை தரும் வைத்தியர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் முறையான திட்டமொன்றைத் தாயாரிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் உப செயலாளர் டொக்டர் உபுல் குணசேகர தெரிவித்துள்ள்ளார்.
0 comments :
Post a Comment