முதல் 10 மாதத்தில் மின்னல் தாக்கி 45 பேர் பலி
இந்த வருடத்தின் கடந்த 10 மாத காலத்தில் மின்னல் தாக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் எட்டு பேர் மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மின்னல் தாக்கத்திற்கு பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மின்னல் தாக்கம் தொடர்பில் சிறுவர்களை தெளிவுபடுத்துவதுடன் சகலரும் அவதானமாக இருக்குமாறும், திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment