Thursday, October 27, 2011

தலைமன்னாரில் வீடொன்றிலிருந்து 1கோடி பெறுமதியான ஹெயோயின் மீட்பு.

பெண் உட்பட நால்வர் கைது
தலைமன்னார் கிராமம் எனும் இடத்தில், வீடொன்றில் மறைத் து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என, மதிப்பிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து, தலைமன்னார் கிராமம் எனும் இடத்தில், வீடொன்று சோதனையிடப்பட்டபோது, வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பொதி ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றின் நிறை ஒன்றரை கிலோ கிரேமாகும். சந்தேகத்தின் பேரில், பெண்ணொருவரும், மூன்று ஆண்களும், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அருள்நேசன் ராஜன் மோஸஸ் எழுத்தூர் மன்னார் , முகமட் குலாம் நிஸான் மூர் வீதி மன்னார் , பி.பி அன்ரன் சிறில் பள்ளிமுனை மன்னார் , எஸ் டெனிஸ்டா ஜீவதி தலைமன்னார் ஆகியோரே கைது செய்யப்பட்டோராகும்.


இவர்களை நீதிதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெமீல் தலைமையில் இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment