EastExpo கண்காட்சி இன்றுடன் நிறைவு.
கிழக்கில் திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றுவரும் EastExpo எனும் மாபெரும் வர்த்தககண்காட்சியும் களியாட்டமும் இன்றுடன் நிறைவடைகிறது. இங்கே விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ யுத்த தளபாடங்கள், ஆயுதங்கள் அடங்கிய காட்சிக்கூடங்கள் அனைவரதும் அவதானத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் 300 இற்கும் அதிகமான காட்சிக் கூடங்களில் கைத்தொழில், விவசாய உபகரணங்களோடு மற்றும் பல அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேற்படி கண்காட்சியை பார்வையிட இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த மக்கள் வெள்ளம் அலைமோதுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதன் அடைவுகளை வெளிக்காட்டும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை (2011.10.23) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் வைபவ ரீதியாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேசன்
0 comments :
Post a Comment