திரிப்போலியில் சார்க்கோசியும் காமெரோனும் லிபியா தொடர்பாகப் போட்டி By Bill Van Auken
வியாழனன்று ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் திரிப்போலிக்கு வருகை தந்ததின் மூலம் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமெரோனும் லிபியாவின் எண்ணெய் வளத்திற்கான முக்கிய சக்திகளின் ஆதிக்கப் போட்டியில் முழுமூச்சில் உள்ளனர் என அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த வருகை முன்கூட்டி அறிவிக்கப்படவில்லை; மிகப்பெரும் இரகசியப் பாதுகாப்பு மறைப்பின் கீழ் நடந்தது. ஒரு திரிப்போலி மருத்துவமனைக்கு சென்றமை மற்றும் கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரியும், இப்பொழுது தேசிய மாற்றுக்காலக் குழுவின் (NTC) தலைவருமானவரும் முஸ்தாபா அப்தெல் ஜலிலுடனும் அமெரிக்கவில் பயிற்சி பெற்ற பொருளாதார வல்லுனரும் கடாபியின் முன்னாள் அதிகாரியுமான, NTC யினால் “பிரதம மந்திரி” என்று நியமிக்கப்பட்டுள்ளவருமான முகமட் ஜிபிரில் ஆகியோருடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டம் ஆகியவை வருகையில் அடங்கியிருந்தன.
இதன் பின்னர், சார்க்கோசி, காமெரோன் மற்றும் NTC தலைவர்கள் அனைவரும் லிபியத் தலைநகரிலிருந்து பெரும் பாதுகாப்புடன் அங்கிருந்து கிழக்கு நகரமான பெங்காசியை நோக்கிச் சென்றனர்; NTC தலைவர்கள், தாங்கள் கடாபியின் விசுவாசிகளுடனான மோதல்கள், பல நகரங்களில் நடப்பவை முடியும் வரை இருக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
திரிப்போலியிலிருந்து அவசரமாகப் புறப்பட்டதானது, நேட்டோவோ அதன் லிபிய வாடிக்கையாளர்களோ தலைநகரில் பாதுகாப்பு பற்றி நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் தெரிவித்தது; அங்கு மோதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன; தலைநகருக்கு 90 மைல்கள் தென்கிழக்கேயுள்ள கடலோர நகரமான சிர்ட்டே, பனி வலிட் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டிற்கும் மோதல்கள் தொடர்கின்றன.
காமெரோனுக்கும் சார்க்கோசிக்கும் இன்னும் உளைச்சல் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் பற்றிய விவரங்களில் NTC திரிப்போலி மீது கொண்டிருக்கும் கட்டுப்பாடு அதிகப்பட்சம் நலிந்த நிலையில்தான் என்னும் சான்றுகளைத்தான் தெரிவிக்கின்றன. தலைநகரின் தெருக்களை ரோந்து சுற்றும் போராளிகளுக்குத் தலைமை தாங்கும் இஸ்லாமியவாதக் கூறுபாடுகள் NTC தலைமையைக் கண்டித்து, அது இராஜிநாமா செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளன.
காமெரோன் திரிப்போலியில் பேசுகையில், நாட்டின் மீதான நேட்டோப் போர்கள் தொடரும் என்று வலியுறுத்தினார். “கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் லிபியாவின் பகுதிகள் சில இன்னும் உள்ளன, கடாபி இன்னும் பிடிபடவில்லை, இப்பணி முடிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்றார் காமெரோன். “எல்லாக் குடிமக்களும் பாதுகாப்புப் பெறும்வரை நேட்டோ பணியைத் தொடர வேண்டும், இப்பணி முற்றுப்பெற வேண்டும்.”
“நேட்டோவின் நோக்கம்” குடிமக்களைப் பாதுகாக்கிறது என்னும் போலிக்கூற்று ஒவ்வொரு நாளும் இன்னும் அபத்தமாக மாறுகிறது. காமெரோன் பேசுகையிலேயே, நேட்டோப் போர் விமானங்கள் சிர்ட்டே மற்றும் பனி வலிட் சிறு நகரங்கள் மீது குண்டுகளைப் பொழிந்தன. நேட்டோவின் பெரும் தாக்குதல் ஆற்றல் இம்மக்களின் இருப்பிடங்கள் மீது “எழுச்சியாளர்கள்” நடத்த விரும்பும் முற்றுகையைச் செய்ய உதவுகிறது; மேற்கத்தையக் கூட்டு ஆரம்பத்தில் இது கடாபி ஆதரவுச் சக்திகள் பெங்காசியில் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத்தான் குறுக்கிடுகிறது என்று கூறிவந்தது.
பிரிட்டனானது பிரிட்டனில் முடக்கிவைக்கப்பட்டுள்ள, கிட்டத்தட்ட 948 மில்லியன் டொலர்கள் லிபியச் சொத்துக்களை விடுவிக்கும் என்றார் காமெரோன்—மொத்தத்தில் ஒரு சிறு சதவிகிதம்தான் இது; மேலும் பிரிட்டிஷ் இராணுவ “ஆலோசகர்கள்” NTC க்கு உதவவும் அனுப்பப்படுவர் என்றார்.
தன்னுடைய பங்கிற்கு சார்க்கோசி பிரான்ஸிற்கு எவ்வித பொருளாதார இழிநோக்கும் லிபியாவைத் தாக்குவதில் கிடையாது என்று சார்க்கோசி வலியுறுத்தினார்.
“நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்தோம், ஏனெனில் அதுதான் செய்யவேண்டிய சரியான செயல் என நாங்கள் நினைத்தோம்” என்றார் அவர். மேலும் “திரைக்குப் பின் எண்ணெய் அல்லது மறுகட்டமைப்பு பற்றி எந்த உடன்பாடுகளும் இல்லை, நாங்கள் எந்தச் சிறப்புச் சலுகைகளையும் கேட்கவில்லை” என்றும் கூறினார்.
ஆனால் தன்னுடைய கருத்துக்களில் ஜலில் அத்தகைய சிறப்புச் சலுகைகள்தான் துல்லியமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தினார். “எங்கள் நண்பர்கள் ஒரு முன்னுரிமைப் பங்கை கொள்வர்; இது லிபியாவிற்கு அவர்கள் உதவிய தன்மையை பொறுத்து இருக்கும்” என்றார் அவர். NTC ஆனது முந்தைய கடாபி அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் கௌரவப்படுத்தும் என்று கூறினாலும், ஜலில் இது ஒன்றும் உத்தரவாதமானது அல்ல என்ற குறிப்பைக் காட்டினார்.
“தற்பொழுதுள்ள ஒப்பந்தங்கள் தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் வரை அவற்றை ஏற்போம்….ஆனால் அரசாங்கத்தின் முந்தைய உறுப்பினர் என்னும் முறையில், சில அவ்வாறு இல்லை, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் அறிவேன்” என்றார் அவர். மற்ற NTC அதிகாரிகளும் சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை லிபியச் சொத்துக்களில் இருந்து முடக்கப்பட்டுவிடுவர், ஏனெனில் அவை குடிமக்களைப் பாதுகாப்பதற்கான “பறக்கக் கூடாது” பகுதியை நிறுவும் ஐ.நா. தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்; ஆனால் அதைத்தான் நேட்டோ சக்திகள் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாகப் பயன்படுத்தினர்.
சார்க்கோசி அரசாங்கம் NTC க்கு முதலில் அங்கீகாரம் கொடுத்ததற்கும், லிபியா மீது முதலில் குண்டுத் தாக்குதல் நடத்தியதற்கும் ஆதாயங்களைப் பெறும் என்று செய்தி ஊடகத்தில் பரந்த ஊகம் உள்ளது; பிரெஞ்சு எண்ணெய்ப் பெருநிறுவனமான Total மிகப் பெரிய நலன்களை அடையக்கூடும்.
லிபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனம் புதனன்று லிபிய எண்ணெய் ஏற்றுமதிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆறு மாத காலத்திற்குள் உற்பத்தி நாள் ஒன்றிற்கு 1 மில்லியன் பீப்பாய்களை அடையக்கூடும்.
அருகாமைக் கிழக்கு விவகாரங்களுக்கு அமெரிக்க உதவி அரச செயலராக இருக்கும் Jeffrey Feltman சார்க்கோசி-காமெரோன் வருகைக்கு ஒரு நாள் முன்பு வந்தார். லிபியாவை தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்தியச் சக்திகள் நலன்களுக்காகத் துண்டாடுவதில் அமெரிக்காவின் அக்கறைகளைப் பாதுகாக்க அவர் வந்துள்ளார்.
இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி, அல் கெய்டாவுடன் சில உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள இஸ்லாமியவாத அடிப்படைவாதக் கூறுபாடுகள் கடாபியை வீழ்த்தும் நேட்டோப் போரின் விளைவாகக் கணிசமான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளது என்ற கருத்துக்களை உதறித்தள்ளினார். “லிபிய மக்கள் அனைவரும் பகிர்ந்து ஈடுபட்ட ஒரு போராட்டத்திற்கும் பின் ஒரு குழுதான் மேலாதிக்கம் செலுத்தும் என்னும் கவலையை நாங்கள் கொண்டிருக்கவில்லை” என்று இஸ்லாமியவாத சக்திகளின் எழுச்சிபெறும் ஆற்றல் பற்றிய கேள்விக்குப் பதில் கூறுகையில் பெல்ட்மன் தெரிவித்தார்.
ஆனால் இத்தகைய கவலைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பது வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டிலும் இஸ்லாமியவாத எழுச்சி மற்றும் அதற்கும் முன்னாள் கடாபி அதிகாரிகள், மேற்கத்தையத் தொடர்புடைய வாஷிங்டன் மற்றும் நேட்டோ ஆதரவு பெற்ற முன்னாள் குடியேறியவர்களுக்கும் இடையே பெருகிய பூசல்கள் பற்றியும் உள்ளன என்பது, வந்துள்ள கட்டுரைகளில் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிகிறது. இரண்டுமே இஸ்லாமியவாத நபர்களான எடிலப் என்னும் இஸ்லாமியவாத குடைக் குழுவை இயக்கும் அலி சல்லபி மற்றும் முன்னாள் லிபிய இஸ்லாமியவாதப் போராளிக் குழுவின் தலைவரான அப்தெல் ஹகிம் பெல்ஹஜ் என்று ஆப்கானிஸ்தானில் அல் கெய்தாவுடன் முன்பு ஒத்துழைத்தவரும் இப்பொழுது திரிப்போலியின் இராணுவத் தளபதியாக இருப்பவர் ஆகியோரின் பெருகிய அதிகாரத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன.
இந்த வாரம் சல்லபி ஓர் அறிக்கையை வெளியிட்டு, அதில் NTC தலைவர் ஜிப்ரில் இராஜிநாமா செய்ய வேண்டும், அவருடைய குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதாயம் நாடுவதற்காக முடிவுகள் எடுப்பதில் ஏகபோக உரிமை கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளார். NTC அதிகாரிகள் “ஒரு புதிய கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகாரச் சகாப்தத்திற்குத் தயாரிப்புக்களை” நடத்துகின்றனர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சல்லாபியின் அறிக்கை திரிப்போலியின் இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக NTC ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தூண்டியுள்ளது.
பெல்ஹஜ்ஜின் உதவியாளர் ஒருவர் ”ஜிப்ரில் விரைவில் அகற்றப்படுவார்” என்று கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. NTC யின் முன்னாள் இராணுவத் தளபதியும் கடாபியின் முன்னாள் உள்துறை மந்திரியுமான தளபதி அப்தெல் பட்டே யூனிஸ் உடைய விதியானது இந்த தன்மையில் இந்த எச்சரிக்கை தீவிரமானது ஆகும். அவருடைய எரிக்கப்பட்டிருந்த சடலம் கடந்த ஜூலை மாதம் பெங்காசிக்கு வெளியே தூர எறியப்பட்டு இருந்தது; இஸ்லாமியவாதப் போராளிகளுடன் அவர் மோதிய பின் இது நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை.
லண்டனைத் தளமாகக் கொண்ட நாளேடு அல்-க்வட்ஸ் அல்-அரபி புதனன்று ஒரு தலையங்கத்தில் அரசியல் அழுத்தங்கள் “இரு போரிடும் பிரிவினரிடையே குருதிகொட்டும் மோதலாக மாறக்கூடும்” என்று எச்சரித்துள்ளது.
லிபியாவில் போர் தொடர்ந்தாலும், நேட்டோ ஆதரவுடைய ஆட்சியானது ஒரு புதிய உள்நாட்டுப் போரைத் தோற்றுவிக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் இருந்தபோதிலும்கூட, சார்க்கோசி, காமெரோன் இருவருமே அவர்களின் வியாழன் உரைகளில் லிபியப் போரானது ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு ஒரு புதிய முன்மாதிரியை அளித்துள்ளது என்று தெரிவித்தனர்.
சார்க்கோசி தன்னுடைய கருத்துக்களில் ஒரு மறைமுகமான அச்சுறுத்தலாக சிரியா அடுத்த இலக்காகலாம் என்று கூறியுள்ளார். “ஒரு நாள் இளம் சிரியர்கள் இன்றைய இளம் லிபியர்கள் போல் அதிருஷ்டம் பெறுவர், ஒரு நாள் அவர்கள், “ஜனநாயகமும் அமைதியான புரட்சியும் நமக்கும்தான்” என்று கூறக்கூடும்” என்றார்.
இதற்கிடையில், பென்டகனின் ஆபிரிக்க கட்டுப்பாட்டுத் தளம் (AFRICOM) லிபியப் போரை அமெரிக்க இராணுவம் அப்பிராந்தியத்தில் புதிய ஏகாதிபத்திய போர்களுக்கு ஒரு முன்னோடி எனக் காண்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜெனரல் கார்ட்டர் ஹாம் லிபியத் தலையீட்டில் AFRICOM உடைய பங்கு ஒரு நெருப்பு வகைப் புது நுழைவு கட்டுப்பாட்டிற்கு என்பது இது பெரிதும் இராணுவ உதவிப் பணிகள் மற்றும் ஆபிரிக்கக் கண்டத்தில் அமெரிக்க இராணுவப் படைகளுக்குத் தளங்களை அமைக்கும் முயற்சிக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
“குண்டுகளைப் போடுதல், டொமஹாக்குகளைப் போடுதல், அத்தகையவை ஒன்றும் லிபியாவில், கட்டுப்பாடு நமக்குத் தேவைப்படும் அளவிற்கு பயிற்சி கொள்ளவில்லை. இப்பொழுது நமக்குப் பிரச்சினை எப்படி இதைத் தொடர்வது, அதையொட்டி ஒரு அதிக அளவில் நாம் எப்படி இதைச் செய்ய முடியும் என்பதுதான்” என்றார் அவர்.
AFRICOM க்கு கூடுதலான சிறப்பு நடவடிக்கைகளை தேவை எனத் தான் விரும்புவதாகவும் ஹாம் தெரிவித்தார்; அது ஆபிரிக்காவில் “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மூன்று குழுக்கள் அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்: கிழக்கு ஆபிரிக்காவில் அல்-ஷபப், நைஜீரியாவைத் தளமாகக் கொண்ட போக்கோ ஹரம் மற்றும் AQIM எனப்படும் மகரெப் அல் கெய்தா.
இக்கடைசியாகக் குறிப்பிட்ட குழு AQIM, 2007ல் லிபிய இஸ்லாமியவாதப் போராளிக் குழுவுடன் இணைந்துவிட்டது; இப்பொழுது லிபியாவில் நேட்டோ ஆதரவுடைய எழுச்சி சக்திகளின் தலைமையில் பலர் இதில் இருந்துதான் வந்துள்ளனர்.
கடாபி ஆட்சியில் இருந்த சேமிப்பு ஆயுதங்களான நடமாடும் நிலத்திலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைக் கருவிகள் அமெரிக்க - நேட்டோப் போரின் விளைவாக காணாமற் போய்விட்டது என்ற கவலையை ஹாம் தெரிவித்தார். வாஷிங்டனும் நேட்டோவும் இஸ்லாமியவாதப் கூறுபாடுகளுக்கு அவைகள் ஆயுதமளித்து உதவது, “இடைக்கால அரசாங்கம் அல்லது பின்னர் வரக்கூடிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக” அவர்கள் வரக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்” அவர் கூறினார்.
0 comments :
Post a Comment