ஐ.நா பாதுகாப்பு சபையில் காரசாரமான வாதம்.
ஐ.நா மனித ரிமை ஆணைக்குழுவின் 18 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. அங்கு பேசிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அனேகமான நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் போது மனித உரிமைகளை கவனத்தில் கொள்ளாது தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், அது போன்றே இலங்கை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் மூன்று தசாப்தங்களாக மட்டும் பயங்கரவாத செயல்களால் மட்டும் கொடூரமான விளைவுகளுக்கும் முகம்கொடுக்கவில்லை வெற்றி பெற்ற அரசாங்கங்கள் மனித உரிமைகள் மற்றும் அதனூடன சட்டங்களை பொருட்படுத்தாமையும் அவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது போன்று மேலும் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து பாதுகாப்பு தடுப்புச் சட்டங்கள் குறித்தும் ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து இலங்கை சார்பாக பேசிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையில் ஏற்படுகின்ற கள நிலைமை மாற்றங்களுக்கேற்ப தமது நடவடிக்கைளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். இப்போது முன்னேற்றமடைந்துள்ள சூழல் அவசரகால ஒழுங்குவிதிகளை முற்றாக நீக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் ஏதேனும் அவசரகால நிலைமை ஏற்பட்டால் அவற்றைக் கையாள்வதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மற்றும் டீஆர்ஓ போன்ற அமைப்புகளை தடை செய்யவும் கைதிகளையும் தடுப்புக் காவலில் இருப்பவர்களையும் தொடர்ந்தும் தடுத்துவைப்பதற்காகவும் சரணடைந்தவர்களின் புனர்வாழ்வுக்காகவும் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை மீது கொண்ட நம்பிக்கையை இலங்கை இழக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெளிவான நடவடிக்கைகளில் இருந்து விலகிச் சென்றதாலேயே அவர் மீதான நம்பிக்கையை தாம் இழக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் தனது தெளிவான நடைமுறைகளுக்கு அப்பால் சென்று செயற்படுவது மிகவும் கவலையளிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 7 இக்கட்டான சூழ்நிலையின் போது இலங்கை பல்வேறு திருப்பங்களை எதிர் கொண்டதாக தெரிவித்த அவர் அவற்றுள் ஒன்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், நிபுணர் குழு அறிக்கைக்கு பரிந்துரை செய்தமை என தெரவித்தார்.
இந்நிலையில் இலங்கையில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் ஓரிருநாட்களில் ஆய்வு செய்துவிட முடியாது எனவும் அவற்றுக்கு சிறிதுகால அவகாசம் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழு யுத்தத்துக்கான காரணம் மற்றும் நல்லிணக்கத்துக்கான காரணங்களை ஆராய்ந்து பரிந்துரைத் தீர்மானங்களை முன்வைக்கமுன் அக்குழு தொடர்பில் விமர்சனங்களை மேற்கொள்வதோ அல்லது ஒரு தீர்மானத்துக்கு வருவதோ சிறந்த விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சிறந்ததொரு பரிந்துரையை முன்வைக்கும் என அரசு நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்த முடிவின் போது 290,000 பேர் இடம்பெயர்ந்து காணப்பட்டதாகவும் அவர்களுள் இன்னும் 7000 பேர் வரையிலானோரே மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சரணடைந்த 11,600 பேரில் 9000 பேர் மறுவாழ்வளிக்கப்பட்டு சமுதாயத்துடன் இணைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்களுள் சிறுவர் போராளிகள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டதோடு இன்னமும் 2700 பேரே சமுதாயத்துடன் இணைக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யுத்தம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த போதும் அதன்போது இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சர்வதேச வலையமைப்பின் ஊடக இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியனவற்றை தோற்கடித்தமை தொடர்பான அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக செயல்பட்டு தொடர்ந்தும் இலங்கைக்கு இன்னல்களை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள், உறுதுணையாக உள்ளனர். அவ்வாறானவர்கள் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய நிலைப்பாட்டை மறந்து செயல்படுவகின்றனர்.
புதிய நாடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறித்து அவர்களுக்கு தாம் நினைவு படுத்துவதாக தெரிவித்த அவர், தேசிய பிரச்சனைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாக தமது உரையில் நினைவு கூர்ந்தார்.
உறுதியளித்தது போல மனித உரிமை நடவடிக்கைகள் தொடர்பான திட்டம் ஒன்றை முன்வைக்க தங்களால் முடிந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அவசர கால சட்டம் நீக்கப்படுவதாக இதற்கு முன்னர் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணியாது அவசர காலம் விலக்கிக் கொள்ளப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்சமயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தமது உரையில் நினைவு கூர்ந்தார். அந்த ஆணைக் குழுவின் பிரதானி நவநீதன்பிள்ளையின் செயல்பாடுகள் மாறுபட்டவிதத்தில் காணப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் ஆலோசனை அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்காது, ஏனைய நாடுகளுக்கு அனுப்பப்பட்டமை இதற்கு ஒரு உதாரணம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment