அரசாங்கப் பாடசாலைகள் நாளை ஆரம்பம்
நாட்டில் உள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் மூன்றாந் தவணைக்காக நாளை திங்கட் கிழமை (5-9-2011) திறக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம்திகதி தமிழ் ,சிங்களப் பாடசாலைகள் இரண்டாந் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டன. முஸ்லிம் பாசாலைகள் ரமழான் விடுமுறைக்காக ஜூலை 29 ஆம் திகதி மூடப்பட்டன.
நாளை திறக்கப்படும் சகல அரசாங்கப் பாடசாலைகளும் மூன்றாந் தவணைக்காக டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மூடப்படவுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
இதேவேளை, அண்மையில் நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது திகத நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment