இந்தியாவின் பாதுபாப்பு நிச்சயமற்ற நிலையில் உள்ளது. மன்மோகன் சிங்
நாட்டின் பாதுகாப்பு சூழல் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மாநில போலீஸ் டிஜிபிக்கள் மாநாட்டின் மூன்றாவது நாள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மன்மோகன் சிங் கூறியதாவது:
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதும், அடிமட்டம் வரையில் கண்காணிப்பும் மிகவும் அவசியமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும. நாட்டின் பாதுகாப்பு சூழல் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நக்சலிசத்தைக் கட்டுப்படுத்த வளர்ச்சிப் பணிகளால் மட்டுமே முடியும் எனக் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment