Wednesday, September 14, 2011

தருஸ்மன் அறிக்கை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்தவேண்டும். பிளேக்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என தாம் நம்புவதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

இன்று தனது பயணம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தான் 2009 நாட்டை விட்டு சென்றபோது இருந்தநிலை இன்றில் லை எனவும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய நாட்டை உறுதி செய்து கொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளபட்ட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும், வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டும் அவ்வாறு ஈடுபடுத்தப்படுவதால் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்படுத்தும் தேவை இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேச்சின் சாராம்சம் இணைக்கப்பட்டுள்ளது



No comments:

Post a Comment