Monday, September 5, 2011

பகிடிவதையின் கொடூரம் - பாதிக்கப்பட்ட மாணவன் மீண்டும் கல்வியை தொடர மறுப்பு

பகிடிவதை காரணமாக உளநலம் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் ஒருவர் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு மறுப்பு தெரிவிப்பதாக அவரது குடுத்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பகிடிவதையின்போது ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பில் தமது மகன் தொடர்ந்தும் கடும் பீதியில் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறனர்

பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவ குழுவொன்றின் பகிடிவதைக்கு இலக்காகிய கொலன்ன, புலுதொட்ட பகுதியை சேரந்த ருவன் பிரசன்ன சுகயீனமுற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் அவர் இன்னும் பூரண குணமடையவில்லை எனவும் அவர் தொடர்ச்சியாக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் உயர் தரப் பரீட்சையில் அதியுயர் சித்திகளைப் பெற்று கடந்த வருடம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவராவார்.

இதேவேளை தமது சகோதர மாணவனுக்கு பாதுபாப்பை வழங்கி அவரது கல்வி நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள உதவுவதாக சப்ரகமுவ ப்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவிக்கிறது.


1 comments :

Anonymous ,  September 5, 2011 at 6:19 PM  

Ragging and bullying is a kind of tactics is to frighten or hurt a weaker person.The bully boys of the universities or in the higher schools to be handed over into the hands of police,no mercy should be shown on the culprits..Justice team should not hesitate to give them the maximum punishment.either to suspend them for many many years from the institutions or to terminate their education with the immediate effect.They should know that they are the leaders of the future generation.They cannot simply behave like barbarians.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com