மீள்குடியேற்ற அமைச்சு மூடப்பட்டால் முரளிதரனின் பதவி பறிபோகுமா?
அடுத்த வருடம் முதல் மீள்குடியேற்ற அமைச்சை மூடிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பெருமளவான மக்கள் மீள குடியேற்றப்பட்டுள்ளதன் காரணமாகவும் மீள்குடியேற்ற அமைச்சை தொடர்ந்தும் வைத்திருப்பது அர்த்தமற்றது என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சை மூடிவிட்டு மீள்குடியேற்றப் பொறுப்புககளை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீள்குடியேற்ற அமைச்சு நீக்கப்பட்டால் அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் பதவிகள் பறிபோகுமா?
அவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்குவதாயின் கருணாவிற்கு என்ன அமைச்சு என்பதில் சிக்கல்கள் உள்ளதாக உள்ளவீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றது. சில சமயங்களில் எவ்வித அமைச்சுப்பதவிகளும் இல்லாமல் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட பணிக்கப்படலாம் எனவும் அத்தகவல்களும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment