பான்,பனிஸ் சமைப்பது போன்று வைத்தியர்களை உருவாக்க முடியாது-சுகாதார அமைச்சர்
பான்,பனிஸ் அல்லது தோசை சமைப்பது போன்று அல்லது வெற்றிலைக் கூறு செய்வது போன்று வைத்தியர்களை உருவாக்க முடியாது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அல்லது அரச சார்பற்ற மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதென்றால் அவை உயர் தரத்தில் இருக்க வேண்டும என்பதே எமது கொள்கையாகும், என சுகாதார அமைச்சர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்
உயர்கல்வியைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்பாகும். ஏனவேஅதிகரித்து செல்லும் உயர் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்க பல்கலைக் ;கழகங்கள் மாத்திரம் போதுமானதாக அமையாது, அதன் காரணமாக வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர். அந்தப் பின்புலத்தில் சிறந்த முறையில் கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
0 comments :
Post a Comment