Friday, September 16, 2011

பான் கீ மூன் இலங்கையை போர்குற்ற கூண்டில் நிறுத்த மேலுமோர் முயற்சி. விமல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த குழுவினால் வெளியடப்பட்டுள்ள தருஷ்ன் அறிக்கை எனக் கூறப்படுகின்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மேலும் ஆராய்வதற்காக பெண் விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச இந்நியமனம் ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையை போர்குற்ற நீதிமன்றில் நிறுத்துவதற்கு எடுக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது.

இலங்கையில் யுத்தத்தின் இறுதின் காலக்கட்டத்தில் இடம் பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு உரிய நிறுவனமொன்று செயற்பட்ட விதம் தொடர்பாகவும் பிரச்சினை உள்ளதாக தருஸ்மான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்தப் பிரச்சினை தொடர்பாக விசாரணை செய்வதற்காக தனி நபர் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டள்ளது. ஐ.நா. சபையின் குடித் தொகை தொடர்பான முன்னாள் நிறைவேற்று அதிகாரி கொராயா டபேட் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற இறுதிக் காலக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான நிறுவனமொன்று தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றி உள்ளதா என்பதை பற்றி ஆராய்வதற்கும் அவ்வாறு செயற்படவில்லை என்பதாக தருஸ்மான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தேடிப்பார்ப்பதற்காகவும்தான் கொராயா டபேட் நியமிக்கப்பட்டள்ளார்.

இதுதான் தருஸ்மான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாடகத்தின் அடுத்தக் கட்டமாகும். உங்கள் எல்லோருக்கும் தெரியும். தருஸ்மான் குழுவை நியமிக்கும் போது அதனை இந்த நாட்டு மக்கள் கடுமையாக எதிர்த்த போது . இலங்கை அரசாங்கத்தையும் மக்களையும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளையும் அமைதிப்படுத்த பொதுச் செயலாளர் முயன்றார். அது எனது மேலதிக புரிந்து கொள்ளலுக்காக நியமிக்கப்பட்ட குழு. இது தொடர்பாக பதற்றம் அடைய வேண்டாம் ' என்று மிக தைரியமாக குறிப்பிட்டார்.

ஆயினும்.பான் கீ மூன் தருஸ்மான் அறிக்கையை மனித உரிமை கவுன்ஸிலிற்கு திருட்டு வீதி வழியாக அனுப்பியுள்ளார் என்பது இப்போது தெளிவாக புரிகிறது. இப்போது தருஸ்மான் அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபையினால் பொறுப்புக் கூறும் விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக விசாரணை அதிகாரி இன்னும் ஓரிரு மாதங்களில் தனது அறிக்கையை வெளியிடுவார். சிலவேளை இந்த அறிக்கை பாக்கியசோதி சரவணமுத்து உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் இப்போதே எழுதி முடித்திருக்கும்.

எப்படி இருந்த போதிலும் இந்த அறிக்கையை டபேட் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடுவார். அந்த அறிக்கையில் யுத்தக் குற்றச் செயல் நடந்துள்ளதாக குறிப்பிடபபட்டிருக்கும். ஐ.நா. சபையின் நிறுவனங்கள் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு முன்னால் அவர்கள் செய்வதறியாத நிலைக்கு ஆளாகியிருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த அறிக்கை ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்ஸிலிற்கு அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனுப்பப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் வாத விவாதங்கள் நடைபெறும். அந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலின் அதிகமான நாடுகளின் அனுமதியை பெறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட காலணித்தவ நாடுகள் முயற்சி செய்யும்.

அங்கு அனுமதி கிடைத்தால் சர்வதேச குற்ற நீதிமன்றத்தில், சிலவேளை இலங்கை ஜனாதிபதி. பாதுகாப்புச் செயலாளர் , பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுத்துச் செல்லப்படும்.இதுதான் இந்த நாடகத்தின் இறுதி அங்கமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com