Saturday, September 10, 2011

தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை தொடர்ந்து விசாரிக்கவே புதிய சரத்துக்களாம்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தவும் குழப்ப நிலையை உருவாக்கவும் சில சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் முன்னர் அவசரகாலச்சட்டத்தின் கிழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தவேண்டியுள்ளது. இவற்றின் காரணமாகவே அரசாங்கம் புதிய ஷரத்துக்களை நிறைவேற்ற முயற்ச்சிக்கின்றது என்று பதில் அமைச்சரவை பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

விரைவில் அனைத்துக்கட்சிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் இந்த புதிய சட்ட விதிகளை பாihளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். அரசாங்கம் இந்த இடத்தில் மிகவும் ஜனநாயகமான முறையில் நடந்து கொள்கிறது என்றும் அவர் கூறினார்; செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் பல கடுமையான சட்டமுலம்களை
அமெரிக்கா உருவாக்கியது அனால் அந்நாட்டில் தற்போது அமைதி நிலவினாலும் குறித்த எந்தவொரு கடுமையான சட்டமும் இன்னும் தளர்த்தப்படவில்லை.

இந்தியாவில் பொடா சட்டம் உள்ளது. காரணம் பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு அரசாங்கமும் பொறுப்புடனேயே செயற்படும் என்றார்.

.

No comments:

Post a Comment