புலிகளுக்கு அருகாமையில் பொன்சேகாவை வைக்க வேண்டாம். மேலதிக பாதுகாப்புக்கு உத்தரவு
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென கொழும்பு உயர் நீதிமன்றம் சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற ட்ரயல் எட் பார் நீதிமன்ற விசாரணைகளின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி லலின் லந்துவேஹெட்டி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளினால் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு அருகாமையிலேயே தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்களை சரத் பொன்சேகா தமக்கு வழங்கியதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.சரத் பொன்சேகாவி;ற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை அருகாமையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துகள் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்ததே வழி செய்யும். அத்துடன் இவ்வாறான தவறான தகவல்களைத் தெரிவிததன் மூலம் தண்டனைக்குரியவராக என அரச பிரதி வழக்கறிஞர் புவனெகா அலுவிஹாரே இவ்வாறு. தெரிவித்தார்
சரத் பொன்சேகா தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட வெள்ளைக்கொடி விவகாரத்தை இதுவரை பெற்ற சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
சரத் பொன்சேகாவினால் கூறப்பட்டதாகச் சொல்லப்படும் வெள்ளைக் கொடி விவகாரம் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என தெரிவித்த அரச பிரதி வழக்கறிஞர் அதன் மூலம் சரத் பொன்சேகா அவசரகாலச் சட்டத்தின் கீழும் தண்டனை கோவைச் சட்டத்தின் கீழும் தவறிழைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டில் அவருடைய குற்றத்தை உறுதி செய்ய முடிவதாக புவனெகா அலுவிஹாரே குறிப்பிட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment