ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களை பான் கீ மூன் பார்வையிட்டாராம்.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட காணொளியை ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தெரிவித்ததாக இன்னசிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்றையும் இன்னசிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதியிடம் பாலித கொஹண இத்தகவலை தெரிவித்ததாக இன்னர்சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட "ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்" என்ற ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்த்துள்ளதாக அறியமுடிவதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற ஆவணப்படத்தை பான் கீ மூன் இதுவரை பார்க்கவில்லை என அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி பல தடவைகள் கூறியுள்ளார்.
சனல் 4 ஆவணப்பட இறுவட்டு பல மாதங்களுக்கு முன்னரே அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment