இந்த அரசாங்கம் சொன்னதை செய்யாது, மாட்டோம் என்பதை செய்யும்- ரவி
இந்த அரசாங்கம் ஏதாவது செய்வதாக வாக்குறுதி அளித்தால் அதை செய்யாது ஒன்றை செய்ய மாட்மோம் என்று கூறினால் அதை நிச்சயமாக செய்வார்கள் என்று ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக கூறினார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை குணாநந்த மாவத்தையில் இடம்பெற்ற
தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக கூறினார்கள்தானே? அதை அவர்கள் செய்யவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறினார்கள் அதையும் செய்யவில்லை சொன்னதை செய்யாததே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும் .
ஆனால் ஒன்றை செய்யமாட்டோம் என்று கூறினால் அதை கட்டாயம் செய்வார்கள் கொழும்பில் வீடுகளை உடைக்கமாட்டோம் என்று கூறுவது பொய்யாகும் என்றார்.
0 comments :
Post a Comment