Monday, September 5, 2011

புனர்ழ்வு பெறுகின்ற கைதிகளை வழிப்படுத்த விரைவில் ஒப்பந்தம்கள்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்ற கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு சென்று தேசிய பொருளாதார வேலைத்திட்டம்களில் அர்ப்பணிக்கும் நோக்கில் இரண்டு ஒப்பந்தம்கள் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளன என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி, கல்வி ஆகிய இரு அமைச்சுக்களுடனேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்;கும் நோக்கத்துடனேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. முதலாவது ஒப்பந்தம் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும போகம்பர
சிறைச்சாலையில் வைத்து இன்று கைச்சாத்திடுவார்.

சிறைச்சாலைக்குள் தேசிய தொழில் தகுதிக்கான வரையறைக்குள் தொழில் பயிற்சி வழங்கப்படும் அத்துடன் கல்வியமைச்சு மறுநாள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கைதிகளின் அறிவை மேம்படுத்துவதற்கான கல்வி செயற்திட்டம்கள் முன்னெடுக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன கைச்சாத்திடுவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com