மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் தின நிகழ்வு...
செப்டெம்பர் 12, 13, 14 சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று காலை சிறைக் கைதிகள தின நிகழ்வு சிறைச்சாலை நலன்புரிச் சங்க தலைவரும் கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட பீடாதிபதி டாக்டர் கே.ஈ.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உட்பட அதிதிகள் வருகை தந்திருந்தனர். டாக்டர் கே.ஈ.கருணாகரன், சிறைச்சாலை அத்தியட்சகர் கிச்சிறி பண்டார ஆகியோர் இங்கு உரைநிகழ்தினார்கள். இதன் போது கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment