ஊழியர்களின் கௌரவம் , உளநலத்தினை அதிகரிக்க செய்வது அவசியம் - ஜனாதிபதி
2012ஆம்ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் முகமாக தனியார் துறையினரை சந்திக்கும் வகையில் நிர்மாணத் தொழிற்துறை பிரதிநிதிகளுக்கும்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று அளரிமாளிகையில் இடம்பெற்றது.பொருளாதார அபிவிருத்தியில் 10 வீத்த்திற்கும் அதிகமான பங்கினை வகிக்கும் நிர்மாணத்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும். நிர்மாணத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
ஊழியர்களின் கௌரவம் மற்றும் உளநலத்தினை அதிகரிக்க செய்வது அவசியமென குறிப்பிட்ட ஜனாதிபதி தாம் தொழில் அமைச்சில் இருந்தபோது அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.
நிர்மாணத்துறை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
1 comments :
Thank you Hon president.It's really great,the steps towards the grievances of the poor workers either the construction or any otherfield.The workers are the keystone of the nation and they should be respected and treated psychologically well by the private and public sectors.
Post a Comment