Saturday, September 17, 2011

எமது நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறது - கரு ஜயசூரிய

எமது நாடு சென்று கொண்டிருக்கும் விதத்தை பார்க்கும் போது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று கூறமுடியாது. எமது நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தெரிவிக்க வேண்டி உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலையிட்டு நீர்கொழும்பு பன்சல வீதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கரு ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜயலத் ஜயவர்தன, மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீ நாத் பெரேரா ,மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் பிரதான வேட்பாளாருமான ரொயிஸ் விஜித்த ஆகியோர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கரு ஜயசூரிய தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
எமது மக்களுக்கு, எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளுக்கு வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்த நிலையில் எல்லா இடங்களிலும் இராணுவ முகாம்களை அமைக்க வேண்டிய தேவை இல்லை. வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏனைய இடங்களிற்கும் பொலிஸாரின் பாதுகாப்பு அவசியம்.

ஆனால், சர்வாதிகார நாடுகளுக்கே நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவ முகாம் தேவைப்படும். எமது நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தெரிவிக்க வேண்டி உள்ளது என்றார்.

No comments:

Post a Comment