ஊழல் மோசடியில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்கு எதிராக விசாரணை
சிறைச்சாலை திணக்களத்தில் இலஞ்சம் மற்றும் முறைக்கேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிறை உயர் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக புனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள மறுசீரமைப்பு அமைச்சு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
விரைவில் ஒய்வு பெறவுள்ள அதிகாரி ஒருவர் இதில் இருப்பதாகவம் இவருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் பல இருப்பதாகவும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் லங்காதீப பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் விஷேட விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விஷேட விசாரணைப் பிரிவிற்கு 300 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சிறைச்சாலையின் உயர்அதிகாரிகளுக்கு எதிரானவை என்றும் அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment