ராஜ் ராஜரட்ணத்தின் வழக்கு தொடர்பிலான தீர்ப்பு ஒத்திவைப்பு
நிறுவனங்களின் உட்தகவல்களைப் பெற்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோதமான முறையில் இலாபமீட்டியமை தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட ராஜ் ராஜரட்ணத்தின் வழக்கு தொடர்பான தீர்ப்பு ஓக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பிலான தீர்ப்பு செப்டெம்பர் 27ம் திகதி வழங்கப்படுவதாக இருந்த போதும் தீர்ப்பினை ஒக்டோபர் 13 திகதிக்கு ஒத்திவைப்பதாக மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜீலை 29 திகதி இந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்பட இருந்த போதும் கோடைகாலத்தின் பின்பு தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி பிற்போடப்பட்டிருந்தது. தற்போதும் ராஜ் ராஜரட்ணம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எப்படியிருப்பினும் ராஜ் ராஜரட்ணத்துக்கு 19 தொடக்கம் 24 வருட நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
...............................
0 comments :
Post a Comment