Monday, September 19, 2011

கடமையை கச்சிதமாக முடிக்கும் மட்டு மேயர்! குப்பை அள்ளுவதற்கு நேரடியாக களத்தில்.

மாநகர, நகர, பிரதேச சபைகளின் பிரதான கடமை குப்பை அள்ளுவதாகும், தற்போது இப்பணியினை நேர்த்தியாக செய்வதற்கு மட்டு மேயர் சிவகீதா களமிறங்கியுள்ளார். அந்வகையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி உப்போடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகள் இன்று காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமயில் நடைபெற்றது.

இந்து மயானம் மற்றும் மக்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ள இப்பகுதியில் அண்டைக்கிராமமான காத்தான்குடி மக்கள் அல்லது நகர சபையினரால் சட்டவிரோதமான முறையில் நீண்டநாட்களாக குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுவந்துள்ளது.

இதனால் நுளம்புகள் நோய்களுக்கு மக்கள் ஆளாகிவந்தனர். இவ்விடயம் பல தடவைகள் சம்பந்தப்பட்டோருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தும் அரசியல் பலவீனம், மற்றும் பிறகாரணிகளால் குப்பை கொட்டலை தடுக்க முடியாமலிருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஸ்தலத்திற்கு மாநகரசபை உறுப்பினர்கள் சகிதம் களமிறங்கிய மட்டு மேயர் சிவகீதா பிரபாகரன் இயந்திரங்களின் உதவியுடன் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்துவதை படத்தில் காண்கின்றீர்கள்

அத்துடன் தொடர்ந்து இங்கு குப்பைகளை கொட்டுவோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மட்டக்களப்பு மாநகரசபை எச்சரித்துள்ளது.



செய்தியாளர்..ஜே.எம்

No comments:

Post a Comment