பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் விசாரணையின் பின்னர் வீடு சென்றனர்.
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது (அததெரண) பிரித்தானியாவில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று காலை பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளாரல் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட இவர்கள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் தங்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை வந்தவர்களிடம் கடவுச் சீட்டு, விசா, அடையாள அட்டை என்பவை தொடர்பிலும் இதர விடயங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்ட 42 ஆண்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் இன்று காலை 10.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment