முஸ்லிம்களின் குர்பானுக்கு எதிராக நான் கருத்துத் தெரிவிக்கவில்லை - மேர்வின் சில்வா
சட்டவிரோதமாக மாடுகளை அறுப்பவர்களின் கைகளையே நான் வெட்டுவதாகத் தெரிவித்தேன்.இஸ்லாத்தின் பெயரில் நடத்தப்படும் குர்பானுக்கு எதிராக நான் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் மேர்வின் சில்வா இன்று தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் பைஸர் முஸ்த்தபா. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அஸாத்சாலி ஆகியோருடன் அமைச்சர் மேர்வின் சில்வா கொழும்பு தெவட்டகஹா ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் தொடரந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அல்லாஹ்வின் பேரில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் குர்பான் மத அனுஸ்டானத்திற்கு எதிராக நான் ஒருபோதும் செயற்படமாட்டேன். சட்டவிரோதமாக மாடுகளை அறுப்பவர்களின் கைகளையே நான் வெட்டுவதாகத் தெரிவித்தேன். 1802 ஆம் ஆண்டு சிங்களப் பெண்மணியினால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசலிலிருந்து உறுதி அளிக்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment