இந்திய -இலங்கை கடற்படைகளின் பாரிய போர்ப்பயிற்ச்சி இன்று ஆரம்பம்
இந்தியா இலங்கை கடற்படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் இன்று தொடக்கம் பாரிய போர்ப்பயிற்ச்சி ஒன்றில் ஈடுபடவுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்புடனான இராஜதந்திர, இராணுவ நெருக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த போர்ப்பயிற்ச்சி இடம்பெறவுள்ளது. இந்த கூட்டுப்பயிற்ச்சி ஆறு நாட்கள் நடைபெறவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இரு நாடுகளினதும் கடற்படைகள் சார்பில் குறைந்தது தலா நான்கு போர்க்கப்பல்கள் இந்த பயிற்ச்சியில் பங்கேற்கவுள்ளன இலங்கை கடற்படையுடன் ஏற்கனவே இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டபோதும் இது அவற்றைவிட சற்று பெரியளவானது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரி மேலும் கூறியுள்ளர். ஆயிரக்கணக்கான இலங்கைப்படையினருக்கு கடந்த பல ஆண்டுகளாக இந்தியா பல்வேறு பயிற்ச்சி நிலையம்களில் பயிற்ச்சிகளை வழங்கி வருகிறது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை முறியடிக்க ஆயுத மற்றும் இராணுவ பயிற்சி, புலனாய்வு பகிர்வு, கூட்டு கடல் ரோந்து போன்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டள்ளதாகவும் டைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டுள்ளது
0 comments :
Post a Comment