ஜேவிபி சிரேஸ்ட தலைவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்துகிறார் குணரெத்தினம்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப்பதவிகளில் இருக்கும் சோமவங்ச, அனுரகுமார, விஜித்த ஹேரத் ஆகியோரை அவர்கள் வசிக்கும் பதவிகளிலிருந்து விலகி கட்சியின் உறுப்பினர்களுக்கு அப்பதவிகளை வழங்க இடம்கொடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஸ்ட தலைவர் பிரேமகுமாரம் குணரெத்தினம் கேட்டுள்ளார்.
கடந்த 18 வருடங்களாக அப்பதவிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணி பெரியளவில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது எனவும் கட்சியின் பொருளாதார நிலையும் கட்சியின் முன்னேற்றமும் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் பிரேமகுமார குணரெத்தினம் அணியினர் தெரிவிக்கின்றனர்.
எக்காரணம் கொண்டும் சோமவங்ச தலைமையிலான அணியினர் தமது பதவிகளிலிருந்து விலகாவிட்டால் கட்சி சம்மேளனத்தை கூட்டி மக்கள் விடுதலை முன்னணியின் சகல பதவிகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படுவர் என்று அவ்வணியினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பிரேமகுமாரம் குணரெத்தனத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளனர் கட்சியிலிருந்து ஒதுங்கியுள்ள உறுப்பினர்கள் பலர் புதிய தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட ஆர்வம் கொண்டள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியை பிளவு படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யாப்பு விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்ச்சிப்பதாகவும் இதுதொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதனால் பிளவு ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக கட்சியை விட்டு விலகிச்சென்றவர்கள் மீளவும் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன என்வும் , சிலர் கட்சியை சீர்குலைக்கவே இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டார்..
மக்கள் விடுதலை முன்னணியில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதை
விடுத்து கட்சியிலிருந்து வெளியேறவோ அல்லது புதிதாக கட்சியொன்றை ஆரம்பிக்கவோ தனக்கு அவசியம் ஏற்படவில்லை என்று ஜே.வி.பி யின் குமார அணியினர் தெரிவித்துள்ளனர் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொள்வதற்காக குழு உறுப்பின்களை தற்போது நாடு முழுவதும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டள்ளதாகவும் குமார அணியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment