Tuesday, September 27, 2011

மஹிந்தவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வழக்கு

இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கர்ணல் ரமேஷ், போரின் இறுதிக் கட்டங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி, வத்சலா தேவி, அமெரிக்காவின் நியூயார்க் நகர சிவில் நீதிமன்றம் ஒன்றில் இழப்பீடு தரக்கோரி இரண்டு வழக்குகளை தொடுத்திருக்கிறார்.

இதில் ஒரு வழக்கில் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரி , மேஜர் ஜெனரல் ஷவீந்தர சில்வாவையும், மற்றொரு வழக்கில் , இலங்கை முப்படைகளின் தளபதி என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அழைப்பாணையை பிறப்பித்துள்ளதாகவும், ஆனாலும் இதுவரை அந்த அழைப்பாணையை பிரதிவாதிகளிடம் கையளிக்க முடியவில்லை என்றும் சவுந்தலாதேவி சார்பாக வழக்குத் தாக்கல் செய்துள்ள உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com