வத்தளை பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்கு நிறைவுற்றது.
உடல்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வத்தளை பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியையின் மரணச்சடங்கு இன்று மாலை இடம்பெற்றது நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் இன்று பிற்பகல் அவர் பணியாற்றிய கல்லூரியில் மரியாதைக்காக வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
பூதவுடல்பெட்டியில் சீல்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் இறந்தவர் சிறியானி வாசனா (33 வயது)என்ற ஒரு பிள்ளையின் தாயாராவார் இவர் ஒரு ஆந்கில ஆசிரியையாவார்.
கடந்த சனிக்கிழமையன்று முற்பகல் 10 மணியளவில் இவர் வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார் சிகையலங்கார நிலையமொன்றுக்கு சென்றுவிட்டு , மின்சார கட்டணத்தையும் செலுத்தி விட்டு வருவதாக கூறியே இவர் சென்றுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் இவரது செல்லிடத் தொலைபேசி செயலிழந்துள்ளது. வீட்டார் தொடர்புகொள்ள முயன்றும் தொலைபேசி செயலிழந்துள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பின்னர் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் வத்தளை பிரதேசத்தில் இவரது சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் மரணமான ஆசிரியையின் பிரேத பரிசோதனை அறிக்கை திறந்த திர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ராகமை வைத்திய சாலையின் சட்ட வைத்திய பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பாகவோ மரணம் ஏற்பட்ட காரணம் தொடர்பாகவோ குறிப்பிடப்படாததுடன், மரணம் தொட்hபாக உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக பிரேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில பாகங்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்
0 comments :
Post a Comment