விமானம் மூலமாக ஹெரோயின் கடத்தி வந்த பெண்ணுக்கு ஆயள் தண்டனை
சமையலறை உபகரணங்கள் இரண்டில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து விமானம் மூலமாக அதனை கடத்தி வந்த பெண் ஒருவருக்கு நிர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார்.
சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதிவாதி சமையலறை உபகரணங்கள் இரண்டில் 130 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்தி வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதிவாதி தனக்கெதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களையும் நீதி மன்றில் ஏற்றுக் கொண்டார்.
0 comments :
Post a Comment