Friday, September 16, 2011

ஈபிடிபி ஆயுதக்குழு அல்லவாம் அரசியல் கட்சியாம்.

நாம் தமிழ் பேசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியே தவிர வன்முறை நோய் கொண்டு அலையும் துணை இராணுவக்குழுவல்ல. இந்த உண்மையை தனது வழமையான கபட நோக்கத்தோடு ,எம்மீது அவதூ பரப்பும் வகையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் அமெரிக்க இராஜர்ங்க அமைச்சின் உதவி செயலர் றொபட் ஓ பிளேக் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தொவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிளேக் வழமைபோல திட்டமிட்ட உள்நோக்கத்தோடு எம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நாம் துணை இராணுவக்குழு என்றும் ஆயுதங்களோடு நடமாடுவதாகவும் தெரிவித்த அவர் நாம் வைத்திருப்பதாக கூறும் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது தவிர யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமக்கும் இடையில் முரண்பாடுகளை திட்டமிட்டு தோற்றுவிக்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர்களை தான் சந்திக்கவிருந்ததாக பொய்யுரைத்து, தமது சந்திப்பை தாமே தடுத்து நிறுத்தியதாகவும் கருத்த வெளியிட்டுள்ளார். இவைகள் ஆதாரமற்றதும் எம்மீது அவதூறு பரப்புவதுமான ஓர் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com