பாடசாலை அனுமதிக்கு லஞ்சம் பெற்ற அதிபர்கள் ஐவர் பதவி நீக்கம்.
தேசிய பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிக்கும் விடயத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாண்டு ஐந்து அதிபர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது எந்தவித கட்டணம்களும் பெறப்படக்கூடாது (பாடசாலை அபிவிருத்திச்சபை மற்றும் வசதிகள் சேவை கட்டணம் தவிர்ந்து) என்று சுற்று நிருபங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஒருசில அதிபர்கள் இலஞ்சம் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர், அதிபர்களின் இத்தகைய நடவடிக்கைகள் கல்வியின் தரத்தை பாதிப்பதோடு நிர்வாக சீர்கேட்டையும் ஏற்படுத்தும்.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிக்கும் விடயத்தில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
இதேநேரம் ஆயிரம் இடைநிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் செயற்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் 400 பாடசாலைகளை தரமுயர்த்துவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
400 பாடசாலைகளில் உள்ள ஆரம்பப் பிரிவுகளை அப்பாடசாலைகளிலிருந்து
நீக்கிகொள்வதற்கு பெற்றோர்களும் பழைய மாணவர் சங்கங்களும் எதிர்ப்ப தெரிவித்து வருகின்றமையே இதற்கான காரணம் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார் ஏனைய 600 பாடசாலைகளில் இச்சிக்கல் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இடைநிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளன. இப்பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே முன்னதாகவே நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது சிக்கல் ஏற்பட்டுள்ள பாடசாலைகளில் சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment