கிளிநொச்சி இளைஞர் யுவதிகளுக்கு குருநாகலில் அமோக வரவேற்பு
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நாட்டில் தேசிய இனங்களுக்கிடையே நட்புறவை கட்டியெழுப்வோம் எனும் தொனிப் பொருளில் வடக்குத் தெற்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகள் மாவத்தகம பிரதேசத்தில் ஒரு வார வதிவிட இல்லங்களில் தங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக வருகை தந்தனர்.
இவர்களை வரவேற்பதற்காக முன்னாள் குருநாகல் மாநகர முதல்வர் நிமல் சந்திர ஸ்ரீ சில்வாவின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்சி ஒன்று குருநாகல் வர்த்தகத் தொகுதிக் கட்டடிட முற்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அங்கு வந்திருந்தவர்களை வரவேற்கும் சிறப்பு வைபவத்தில் பேசிய சந்திர ஸ்ரீ த சில்வா 30 வருட யுத்த நிறைவுக்குப் பின்பு எமக்கிடையே மிக அவசியமாகத் தேவைப்டுவது ஐக்கியமாகும், இந்த ஐக்கியம் தொடர்ந்து மேலோங்க வேண்டுமெனில் தென்னிலங்கை மக்கள் வடபுலம் செல்லுதல் வேண்டும். வடபுல மக்கள் தென்னிலங்கை வருகை தர வேண்டும். இதுதான் இந்த நாட்டு ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பும், இந்த நாட்டு மக்களுடைய எதிர் பார்ப்புமாகும் இதனை தேசிய இளைஞர் சேவை மன்றம் நிறைவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இளைஞர் யுவதிகளின் மூலமதான் ஐக்கியம் ஒருமைப்பாடு, ஒளிமயமான எதிர்காலம், நல்வாழ்வு என்பவற்றை இந்த நாட்டில் உருவாக்க முடியும். இங்கு உங்களைக் காணும்போது எங்களுக்கு மிக்க சந்தோசமாக உள்ளது. இங்குள்ள இளைளஞர் யுவதிகளுடன் நன்கு நெருங்கி பழகிப் பாருங்கள் நல்ல செய்திகளை அறிந்து கொள்ள முடியம் என்று அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
இவ் வரவேற்பினைத் தொடர்ந்து குருநாகல் பிரைட் பிரோ ஹோட்டலில் விருந்து உபசாரம் நடைபெற்றது .
இதனைத் தொடர்ந்து குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம நகரில் ஒரு மகத்தான வரவேற்பு நடைபெற்றது. இந்த வரவேற்பு மாவத்தகம வர்த்தக சங்கத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க, மாவத்தகம பிரதேச சபையின் தவிசாளா உபுல் பெரேரா, மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மூவின சமயப் பெரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரதேசம் குருநாகல் மாவட்டத்தில் கூடுதலாக தமிழ் தோட்ட தொழிலாளர்கள் வாழும் பிரதேசமாகும்
இக்பால் அலி
0 comments :
Post a Comment