ஆட்கடத்தல் : இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் ஆறு வருட சிறை!
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் ஆறரை வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட கப்பலின் தலைமை மாலுமிக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 37 வயது நிரம்பிய இலங்கையர் ஒருவருக்கு ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஆறரை வருட கால சிறைத்தண்டனை அவுஸ்திரேலியாவில் இம்மாதம் இரண்டாம் திகதி விதிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவினால் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கு இது நல்லதொரு எச்சரிக்கையாகும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவுஸ்திரேலிய நீர்ப்பரப்பில் கைப்பற்றப்பட்ட கப்பலின் தலைமை மாலுமியாவார். இந்தக் கப்பலில் 54 இலங்கைப்பிரஜைகள் பயணம் செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment