Wednesday, September 7, 2011

பிள்ளையான் வேடர் இனத்ததை சேர்ந்தவராம். லங்கா'சி'நியூஸ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரைசந்திரகாந்தன் தனது இனத்தை பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்திலும் தேசிய அடையாள அட்டையிலும் வேடர் எனமாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று லங்கா'சி'நியூஸ் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையில் தன்னை இலங்கை தமிழர் என குறிப்பிட்டிருப்பதாகவும், அது தவறான தகவல் என்றும் தான் தமிழர் இல்லை என்றும் தான் ஒரு வேடர் சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்திருக்கும் பிள்ளையான் தற்போது அதனை மாற்றி பிறப்பு சான்றிதழில் வேடர் சமூகம் என பதியுமாறு அவர் விண்ணப்பித்திருக்கிறார் என லங்கா சி நியூஸ் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளையான் தன்னை வேடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அண்மையில் தம்பனையில்வேடர் சமூகத்தலைவர் வன்னியாலெத்தோவுடனான சந்திப்பின்போது ஏற்றுக்கொண்டார் என்றும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆகவே அவர் தனது இன அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்.

வாகரையில் 35ஆயிரம் பேர் வேடுவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதாக அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை வேடர் என குறிப்பிட்டதாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இதேவேளை பிள்ளையான் வேடர் இனத்தை சேர்ந்தவர் என்பதில் தவறில்லை என்றும் ஏனெனில் அவரிடம் வேடர்களுக்குரிய குணம் காணப்படுவதாகவும் மட்டக்களப்பு தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். வேடர்களுக்கே உரித்தான ஈவிரக்கமின்றி உயிர்களை கொல்லும் குணம் பிள்ளையானிடம் காணப்படுவதாகவும், மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment