இலங்கையில் நாலரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒரு வீதி விபத்து
இலங்கையில் நாலரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒரு வீதி விபத்து இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலரை மணித்தியாலத்திற்கு ஒரு தடைவ இடம்பெறும் வீதி விபத்துக்களில் ஒருவர் வீதம் இறப்பதாகவும் ஏறக்குறைய ஆறு வாகன விபத்துக்கள் தினமும் இடம் பெறுவதாகவும் இதில் மூன்று பேர் தினமும் காயத்திற்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை இடம் பெற்ற வீதி விபத்துக்களில் 2086 பேர் காயமடைந்துள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 448 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், 171 முச்சக்கர வண்டி விபத்துக்களும், 69 பஸ்ஸூடன் சம்பந்தப்பட்ட விபத்துக்களும், 218 பாதசாரிகள் விபத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
இதேவேளை, கடந்த 2005 மதல் 2011 ஆம் ஆண்டு ஜூன் வரையான காலப் பகதிக்குள் 19 இலட்சம் வாகனங்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் அதிகளவானவை மோட்டார் சைக்கிளாகும்.
0 comments :
Post a Comment